Friday 27 December 2013

வாங்க பழகலாம்

நேர்மையான அதிகாரிகள் மற்றும் நேர்மையாக இருந்த காரணத்தினால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட அதிகாரிகள், மேலும் ஒய்வூதியம் வழங்கப்படாமல் இழுத்தடிக்கப் படும் அதிகாரிகள் தங்களை எஸ் எம் எஸ் அல்லது இ மெயில் மூலம் தொடர்பு கொண்டால், அவர்களுக்கு நல்ல தீர்வு தமது ஆட்சியில் கிடைக்கும் என்றும், நேர்மையான அதிகாரிகளுக்கு நல்ல பதவி வழங்கப்படும் என்றும் கெஜ்ரிவால் அழைப்பு விடுத்துள்ளார்.

இன்று நித்யானந்தாவுக்கு 37வது பிறந்தநாள் ஆகும். இந்நிலையில் ரஞ்சிதாவுக்கு நித்தியானந்தா இன்று தீட்சை வழங்கினார். பிடதி ஆசிரமத்தில் உள்ள புனித குளத்தில் குளித்து, காவி உடை அணிந்த ரஞ்சிதா, நித்யானந்தாவிடம் சென்று தீட்சை பெற்றார். தொடர்ந்து ரஞ்சிதாவுக்கு மா ஆனந்தமாயி என்று பெயர் சூட்டப்பட்டது.

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் ராஜஸ்தானில் தானமாக பெற்ற கண்களை பயன்படுத்தாமல் வீணடிக்கப்பட்டது அறியப்பட்டுள்ளது.இப்பிரச்னை குறித்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேந்திர ரத்தோர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மாநிலத்தில் உள்ள ஏழு கண் வங்கிகளில் ஆய்வு நடத்தி ஒரு வார காலத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார்.


2 comments:

  1. ரஞ்சிதா என்ற மா ஆனந்தமாயிடம் நான் சிஷ்யனாகச் சேர என்ன தகுதி வேண்டும்?

    ReplyDelete
  2. கேமராவோடு போகக்கூடாது, அவ்வளவுதான் தகுதி!
    போங்க! போய் பழகுங்க...
    புடிச்சா (எதை என்று கேட்கக்கூடாது) வச்சிப்பாங்க!!

    ReplyDelete