Tuesday 24 December 2013

அறிவோம்

சூரிய மின்சக்தியை பயன்படுத்தி பம்ப்செட் மோட்டாரை இயக்கி விவசாயம் செய்கிறார் திரு மாரியப்பன்.  சேலம் மாவட்டம் தார்க்காடு கிராமத்தை சேர்ந்த இவர் சில மாதங்களுக்கு முன் தன் வீட்டின் கூரையில் சூரிய மின் தகடுகளை பொருத்தி 7.5 குதிரைத்திறன் கொண்ட மோட்டரை இயக்கி தனது பத்து ஏக்கர் நிலத்துக்கு நீர் பாசனம் செய்கிறார்.   இதற்கு ஏழரை இலட்சம் செல்வானது என்றும் அதில் அரசு மானியமாக இரண்டேகால் இலட்சம் கிடைத்தது என்கிறார், திரு மாரியப்பன்.  கன் ஸ்பிரே மூலம் நீர் பாய்ச்சி சோளம் மற்றும் கரும்பு விளைவிக்கும் இவர் கூறும்போது அடுத்த இருபது ஆண்டுகளுக்கு இனி தனக்கு மின்சார தேவை ஏற்படாது என்றும் நீரும் குறைந்த அளவே பயன்படுத்தப்படுகிறது என்றும் நம்பிக்கையோடு தெரிவித்தார்.
வாழ்த்துக்கள் திரு மாரியப்பன்!

டில்லி முதல்வராக பதவி ஏற்க உள்ள ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் திரு அர்விந்த் கேஜ்ரிவால் தனக்காக ஒதுக்கப்பட்ட அரசு வீட்டை ஏற்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.  அதே போல தனக்கு தரப்பட இருந்த இசட் பிரிவு பாதுகாப்பையும் தேவையில்லை என்றும் கூறிவிட்டார்.  தனக்கு பொதுமக்களும் கடவுளுமே பாதுகாப்பார்கள் என்றும் கூறிவிட்டார்.  பொதுவாக ஒரு முதல்வரை சந்திக்க பொதுமக்கள் பலரும் வந்து செல்வார்கள்.  மேலும் பல முக்கியஸ்தர்கள் அவரை சந்திக்க வருவார்கள்.  அப்படி இருக்கும்போது தன்னுடைய வீட்டில் இவரை சந்திக்க வருபவர்களுக்கும் சவுகரிய குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளது.  மேலும் அங்கு அவரை சுற்றியுள்ள மற்ற குடும்பத்தினருக்கும் பல இன்னல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.  எனவே திரு கேஜ்ரிவால் முதல்வருக்காக அரசு அமைத்துள்ள வீட்டில் தங்குவதே அவருக்கும் சவுக்கரியம்.  அவரை தேர்ந்தெடுத்த மக்களுக்கும் சவுக்கரியமாக இருக்கும்.  தேவையில்லாத ஸ்டண்ட் வேண்டாம் கேஜ்ரிவால்ஜி!

ஆங்கில புத்தாண்டு அன்று டாஸ்மாக்-ல் நூறு கோடி ரூபாய்க்கு மது விற்பனைக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  நாடு விளங்கிடும்!




3 comments:

  1. சூரிய ஒளி மின்சாரம் குறித்து எனக்கும் சில கனவுகள் உண்டு. பார்ப்போம்.

    ReplyDelete
  2. அரசாங்கத்தை மட்டும் குறை கூறாமல் தன்னால் என்ன செய்து முன்னேற முடிகிறது என்பது இந்த மாரியப்பனால் அனைவரும் அறிந்து கொள்ள முடியும் பாராட்டுகள் மாரியப்பனுக்கும் அந்த செய்தியை பகிர்ந்த உங்களுக்கும் அஜிஸ்

    ReplyDelete
  3. மாரியப்பன் அவர்களுக்குப் பாராட்டுக்கள்...

    ReplyDelete